Oct 6, 2011

செல்போன் மூலம் வருமானம் – பகுதி 1

வணக்கம் நண்பர்களே.

    அனைவருக்கும் இனிய விஜய தசமி நல்வாழ்த்துக்கள்.

   இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை எண்ணிக்கையில் உலகில் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடத்திற்கு முன்னேறி வருகிறது. அதற்கேற்ப வேலையில்லாத் திண்டாட்டமும் பெருகி வருகிறது. விலைவாசியும் அதிகரித்து வருகிறது. படிப்புக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. மொத்த மக்கள் தொகையில் அதிகமானோர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே. அவர்கள் அனைவருமே ஏதேனும் இதர வருமானம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்புகிறார்கள்.

    அத்தகையோர் தங்களுடைய செல்போனைப் பயன்படுத்தி சுலபமாக பணம் சம்பாதிக்கலாம். மக்கள் தொகைக்கேற்ப செல்போன் சேவையிலும் இந்தியா முன்னிலையில் உள்ளது. தொலைத்தொடர்பு ஆணையத்தின் ௨0௧௧ ஜூலை அறிக்கையின்படி இந்தியாவில் 840.28 மில்லியன் தொலைத்தொடர்பு சந்தாதாரர்கள் உள்ளனர். சராசரி ஒவ்வொருவரிடமும் ஒரு செல்போன் உள்ளது. மொத்த மக்கள் தொகையை விட செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒவ்வொருவருக்கும் குறைந்தது 25 முதல் 50 பேராவது தெரிந்தவர்களாக இருப்பார்கள். அவர்களிடமும் செல்போன் இருக்கும். எனவே செல்போன் மூலம் பணம் சம்பாதிப்பது மிக சுலபம்.

எப்படி என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.

0 comments:

Post a Comment